ETV Bharat / sitara

அகில உலக சூப்பர் ஸ்டாரின் 'சுமோ' - புது அப்டேட்

author img

By

Published : Nov 28, 2019, 1:15 PM IST

Updated : Nov 28, 2019, 3:07 PM IST

நடிகர் சிவாவின் 'சுமோ' திரைப்படம் பற்றிய புது அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

sumo
sumo

நடிகர் சிவா-'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' படங்களை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'சுமோ'. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து முழுநீளக் காமெடியில் உருவாகியுள்ள சுமோ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் சுமோ மல்யுத்த வீரர் யோஷிநோரி தாஷிரோ உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

எல்கேஜி, கோமாளி, பப்பி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

sumo
சுமோ திரைப்பட போஸ்டர்கள்

இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், 2020 பொங்கல் விடுமுறைக்கு படம் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இதனிடையே தற்போது சுமோவின் டிரெய்லர் பற்றிய புதிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் டிசம்பர் 10ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க...

'ஹீரோ' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Intro:Body:

sumo movie update

Conclusion:
Last Updated : Nov 28, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.