தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கோலோச்சிய நடிகர் செந்திலுக்கு நேற்று (ஏப்ரல் 13) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. செந்திலைத் தொடர்ந்து அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில்,செந்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உண்மைதான். அதற்காக தற்போது சிகிச்சை எடுத்துவருகிறேன். மாநகராட்சி மூலம் போடப்பட்ட கரோனா தடுப்பூசியால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனவே மக்களாகிய நீங்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்" என அறிவுறுத்தியுள்ளார்.