தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சதீஷ் இதுவரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக சிவகார்த்திகேயன், சிவா ஆகிய நடிகர்களுடன் இவர் நடித்த படங்களில், காமெடி பெரிதாக பேசப்பட்டது.
இந்நிலையில் சந்தானம், சூரி, யோகிபாபு வரிசையில் தற்போது சதீஷும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் சதீஷுக்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல்.07) பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியாகும் அன்பிற்கினியாள்!