நடிகர் அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும், இந்தப்படத்தின் படப்பிடிப்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் அப்டேட் எப்போது என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். படக்குழுவோ விரைவில் அப்டேட் வெளியிடப்படும்; அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் தனது ட்விட்டரில் ஒரு படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனது புதிய ஐபோனின் ஸ்கிரீன்சேவர் என்று பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தில் அஜித் கோட்சூட்டுடன் ஸ்டைலாக நிற்பது போன்றும் 'வலிமை' என்றும் எழுதப்பட்டிருந்தது.
-
My screen saver in new iPhone 12 😍#Valimai pic.twitter.com/RahrKZiuVo
— RK SURESH (@studio9_suresh) December 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My screen saver in new iPhone 12 😍#Valimai pic.twitter.com/RahrKZiuVo
— RK SURESH (@studio9_suresh) December 14, 2020My screen saver in new iPhone 12 😍#Valimai pic.twitter.com/RahrKZiuVo
— RK SURESH (@studio9_suresh) December 14, 2020
இதனைப்பார்த்த ரசிகர்கள் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா என்று அவரிடம் கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால், இது 'வலிமை ஃபர்ஸ்ட் லுக் அல்ல' என்று அவர் மறுத்துவிட்டார்.
ஆர்.கே. சுரேஷ் அஜித்தின் மீது அதீத பற்று கொண்ட 'வலிமை'யான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோலி இல்லாமல் குழந்தையுடன் திருமண நாள்கொண்டாடிய அனுஷ்கா!