நடிகர் ராஜ்கிரண் சற்குணம் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகிவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ராஜ்கிரண் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'விருமன்' படத்தில் கார்த்தியின் தாய்மாமனாக ராஜ்கிரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக மதுரையில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் ராஜ்கிரண் கலந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் ராஜ்கிரண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தனது மகன் நைனார் முஹமது எழுதி, இயக்கும் 'என் ராசாவின் மனசிலே' இரண்டாம் பாகத்தில் ராஜ்கிரண் நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'என் ராசாவின் மனசிலே' - விரைவில் இரண்டாம் பாகம்