பாலிவுட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் அந்தாதூன். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரேனா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி தனது மகன் பிரசாந்த்தை வைத்து எடுத்து வருகிறார்.
இதனை பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் பிரசாந்த் அழகாக பியானோ வாசிக்கிறார். இந்த வீடியோவை பிரசாந்த்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க...நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி