ETV Bharat / sitara

ஸ்டைலிஷ் நடிகர் பிரசன்னா பிறந்தநாள் ஸ்பெஷல் - latest cinema news

தன்னை மனத்தில் வைத்து தனுஷ் கதை எழுதியதால் சற்றும் யோசிக்காமல் படத்திற்குச் சம்மதம் தெரிவித்தவர்தான் நடிகர் பிரசன்னா. இன்று பிறந்தநாள் காணும் இவரைப் பற்றி காண்போம்.

பிரசன்னா
பிரசன்னா
author img

By

Published : Aug 28, 2021, 8:45 AM IST

எந்தக் கதாபாத்திம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடிப்பவர் பிரசன்னா. தற்போதுவரை இமேஜ் வளையத்திற்குள் சிக்காமல் நாயகன், வில்லன், நாயகனின் நண்பன் எனக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி நடித்த அனைத்துப் படங்களிலுமே வாகை சூடிவருகிறார்.

இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 'ஃபைவ் ஸ்டார்' படத்தின் மூலம் அறிமுகமாகி, விமர்சகர்களிடம் பல பாராட்டுகளைப் பெற்றார். இதனையடுத்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளியான 'அழகிய தீயே' படத்தில் நடித்தார். இந்தப் படம் இவரது திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அழகிய தீயே
அழகிய தீயே

பிறகு, 'கண்ட நாள் முதல்', 'சீனா தானா 001', 'சாது மிரண்டா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். நாயகனாக வளர்ந்துவந்த இவர், அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக மிரட்டினார். பிறகு, 'கல்யாண சமையல் சாதம்' திரைப்படத்தில் ஆண்மைக் குறைபாடுடைய நபராக நடித்திருந்தார்.

பிரசன்னா-சினேகா முதல் முறையாக இணைந்த படம், 'அச்சமுண்டு அச்சமுண்டு'. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிரசன்னா
பிரசன்னா

இப்படி வளர்ந்துவந்த பிரசன்னாவை மனத்தில் வைத்து தனுஷ் எழுதிய படம், 'பவர் பாண்டி'. படத்தின் நாயகனான ராஜ் கிரணின் மகன் கதாபாத்திரத்திற்குப் பிரசன்னாவை அணுகியபோது முதலில் மறுப்புத் தெரிவித்தார்.

ஆனால் தன்னை மனத்தில் வைத்து எழுதிய படம் எனத் தெரிந்தவுடன் சற்றும் யோசிக்காமல் அந்தப் படத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாக ஒருமுறை அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரசன்னா
பிரசன்னா

இவர் கடைசியாக, நவரசா படத்தில் இடம்பெற்றிருந்த, அக்னி பிராஜட் படத்தில் நடித்திருந்தார். அரவிந்த் சாமியின் நண்பராக இஸ்ரோவில் வேலைசெய்யும் நபராக ஸ்டைலாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றார். இவரிடம் திறமை, கடின உழைப்பு இருந்தும் தமிழ்த் திரையுலகில் இவருக்கென தனி அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்பது திரை விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நவரசா பட புகைப்படம்
நவரசா பட புகைப்படம்

இந்நிலையில் பிரசன்னா இன்று தனது (ஆகஸ்ட் 28) 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

இதையும் படிங்க: புரோட்டா சூரி முதல் 'விடுதலை' வரை... சூரியின் பிறந்த நாள் ஸ்பெஷல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.