ETV Bharat / sitara

HBD பார்த்திபன் - பன்முகக் கலைஞனுக்குப் பிறந்த நாள் - இயக்குநர் பார்த்திபன்

நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இன்று அவரது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

HBD Parthiban  Parthiban  actor Parthiban birthday  Parthiban birthday  director parthiban  பார்த்திபன் பிறந்தநாள்  நடிகர் பார்த்திபன்  ராதாகிருஷ்ணன் பார்த்திபன்  இயக்குநர் பார்த்திபன்
பார்த்திபன்
author img

By

Published : Nov 15, 2021, 7:08 AM IST

Updated : Nov 15, 2021, 7:41 AM IST

தமிழ்த் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இன்று (நவம்பர் 15) தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

இவர் சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகத் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். முதலில் 1981ஆம் ஆண்டு 'ராணுவ வீரன்' படத்தின் சிறிய வேடத்தில் அறிமுகமான பார்த்திபன், 'அன்புள்ள ரஜினிகாந்த்', 'தூரம் அதிகமில்லை', 'தாவணி கனவுகள்' போன்ற படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

HBD Parthiban  Parthiban  actor Parthiban birthday  Parthiban birthday  director parthiban  பார்த்திபன் பிறந்தநாள்  நடிகர் பார்த்திபன்  ராதாகிருஷ்ணன் பார்த்திபன்  இயக்குநர் பார்த்திபன்
HBD பார்த்திபன்

இதையடுத்து, 1989ஆம் ஆண்டு இவர் இயக்கிய 'புதிய பாதை' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் 'பொண்டாட்டி தேவை', 'தாலாட்டு பாடவா', 'குடைக்குள் மழை', 'புள்ளகுட்டிகாரன்', 'தையல்காரன்', 'சுகமான சுவை', 'உள்ளே வெளியே', 'பாரதி கண்ணம்மா' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் முதலாவதாக இயக்கி நடித்த படமான ‘புதிய பாதை’ படத்திற்காக, சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்றார். பின்னர் ‘பாரதி கண்ணம்மா’ படத்திற்காகச் சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதும், ‘ஹவுஸ்புல்’ படத்திற்காகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதும், சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசின் விருதும், ‘ஒத்த செருப்பு’ படத்திற்காகச் சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதும், ‘சிறந்த இயக்குநருக்கான ஜூரி விருதும், சிறந்த தனி நடிப்பு விருதும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ஆணுறை பரிசோதனையாளரான ரகுல் ப்ரீத் சிங்: படத் தலைப்பு வெளியீடு

Last Updated : Nov 15, 2021, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.