சென்னை: நடிகர் மயில்சாமி தமிழ்த்திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர்.
அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த இவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கட்சி செயல்பாடுகளிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறினார்.
பின்னர் அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் அவருடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வந்தார்.
இதற்கிடையில் கரோனா பேரிடர் காலத்தில் தான் வசித்துவரும், விருகம்பாக்கம் தொகுதியில் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவந்த இவர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுகவிலிருந்து வெளியேறிய இவர் பிற கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் சுயேச்சையாகவே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இவர் தற்போது, விருகம்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ரவி, திமுக சார்பில் பிரபாகர் ராஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் சிநேகன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.