Mohan Re-entry: நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
80களில், தமிழ் சினிமாவில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்தவர், நடிகர் மோகன். அந்த காலகட்டத்தில் இவரது பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின. அதன்பின் படிப்படியாக படவாய்ப்புகளை இழந்த மோகன் தற்போது வெவ்வேறு பிசினஸ்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் 'தாதா 87', 'பவுடர்' ஆகியப் படங்களை இயக்கிய விஜய்ஶ்ரீ இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்க உள்ளார்.
இப்படத்திற்கு 'சில்வர் ஜூப்ளி ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க:நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா - சிலை திறந்துவைத்தார் முதலமைச்சர்