ETV Bharat / sitara

நம்பியார் நூற்றாண்டு விழா: பிரபலங்கள் பங்கேற்பு

சென்னை: பழம்பெரும் திரைப்பட நடிகர் எம்.என். நம்பியாரின் நூற்றாண்டு விழா மகாகுரு என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடப்பட்டது.

actor-mn-nambiar
author img

By

Published : Nov 20, 2019, 2:42 PM IST

தமிழ் திரைப்பட உலகின் அசைக்கமுடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.என்.நம்பியார். ராஜகுமாரி, பெண்ணரசி, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, ஜென்டில்மேன், எஜமான், வருஷமெல்லாம் வசந்தம், வின்னர் உள்ளிட்ட ஆயிரம் படங்களுக்கும் மேல் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அவர் 2008ஆம் ஆண்டு தனது 89வது வயதில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், நம்பியாரின் நூற்றாண்டு விழா மகாகுரு என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று கொண்டாடப்பட்டது.

actor-mn-nambiar
நம்பியார் நூற்றாண்டு விழா

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நடிகர்கள் சிவக்குமார், ராஜேஷ், டெல்லி கணேஷ், நடிகைகள் சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா, இயக்குநர் பி.வாசு உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் பலரும், நம்பியார் உடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, மகாகுரு உடன் நான் மூன்று முறை சபரிமலைக்கு அவர் கையால் மாலை அணிந்து சென்றுள்ளேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பாக்கியம். பிறகு திரைத்துறையில் நான் பிஸியானதால் தொடர்ந்து அவருடன் பயணிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் உள்ளது என்று தெரிவித்தார்.

actor-mn-nambiar
நம்பியார் நூற்றாண்டு விழா

தொடர்ந்து பேசிய நடிகர் சிவக்குமார், தமிழ் திரை உலகில் தவிர்க்கமுடியாத ஒரு ஆணழகன் எம்.என்.நம்பியார். தனது வாழ்நாள் முழுவதும் ராமனாகவே வாழ்ந்து வந்தவர் அவர் என்றும் கூறினார்.

இதையும் படிங்க...

'நம்பியார் ராமனாகவே வாழ்ந்தார்' - நடிகர் சிவகுமார்

Intro:எம் என் நம்பியார் நூற்றாண்டு விழா
Body:பழம்பெரும் திரைப்பட நடிகர் எம் என் நம்பியார் அவர்களின் நூற்றாண்டு விழா மகாகுரு என்ற தலைப்பில் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பொன் ராதாகிருஷ்ணன் நடிகர் சிவகுமார் நடிகர் ராஜேஷ் நடிகை சச்சு நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் எம் என் நம்பியார் உடன் ஏற்பட்ட அனுபவங்களை விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசினார்கள்.

இந்த விழாவில் பேசிய இளையராஜா மகாகுரு உடன் நான் மூன்று முறை சபரிமலைக்கு அவர் கையால் மாலை மாலை அணிந்து சென்றுள்ளேன். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பாக்கியம். பிறகு திரைத்துறையில் நான் பிஸியா னதால் தொடர்ந்து அவருடன் பயணிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு இன்றும் உள்ளது என்று தெரிவித்தார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில்,
வில்லனாக நடித்த ரஜினிகாந்த் கமலஹாசன் சத்யராஜ் ஆகியோர் தற்போது மிகப்பெரிய ஹீரோக்களாக உள்ளனர் ஆனால் இவர்களை விட அழகிலும் அறிவிலும் உயர்ந்த நம்பியார் ஹீரோவாக முடியவில்லை இவர் எந்த விதத்தில் குறைந்து போனால் என்று ஆதங்கத்தோடு பேசினார். தமிழ் திரை உலகில் தவிர்க்கமுடியாத ஒரு ஆணழகன் எம் என் நம்பியார். Conclusion:50 பேரை மட்டுமே சென்ற ஐயப்பன் கோவிலுக்கு என்று 50 லட்சம் பேர் செல்வதற்கு வழிவகுத்த எம் என் நம்பியார் ஒரு மகாகுரு என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.