ETV Bharat / sitara

ரஜினி ரசிகரை இயக்குகிறாரா ரஜினியின் மகள்? - அப்டேட் விரைவில்... - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய படங்கள்

நடிகர் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா, ராகவா லாரன்ஸ் உடன் சந்தித்துள்ள புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், ஐஸ்வர்யா இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

lawrence meet aishwarya rajinikanth
lawrence meet aishwarya rajinikanth
author img

By

Published : Mar 14, 2022, 10:08 AM IST

இயக்குநர் ஐஸ்வர்யா, தனுஷ் நடிப்பில் '3', கௌதம் கார்த்திக் நடிப்பில் 'வை ராஜா வை' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, பல்வேறு படங்கள் இயக்கவுள்ளதாக பேச்சு வந்த வண்ணம் இருந்தாலும், அவர் நீண்ட காலமாக எந்த படத்தையும் இயக்கவில்லை.

தற்போது, அவர் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களிடம் அவர் கதை சொன்னதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரும், நடிகருமான ராகவா லாரன்ஸை அவரது வீட்டில், ஐஸ்வர்யா நேற்று (மார்ச் 13) சந்தித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர், "சுவாரசியமான ஒன்று உருவாகிறது... மிகவும் அன்பான ராகாவா லாரன்ஸ், சந்தித்த பிறகு எனது மூளை பரபரக்கிறது. வேலை தொடங்கிவிட்டது..." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதற்கு லாரன்ஸ், "வாழுங்கள் சகோதரி... தங்களுடன் எப்போதும் ராகவேந்திர சாமிகள் உடன் இருப்பார்" என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், லாரன்ஸை வைத்து ஐஸ்வர்யா விரைவில் படம் இயக்க உள்ளார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா பிப்ரவரி 1ஆம் தேதி கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்த நிலையில் வீடு திரும்பினார். அதையடுத்து, மீண்டும் உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விக்ரம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - மிரட்டும் மேக்கிங் கிளிம்ப்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.