தமிழ்த் திரையைப் பொறுத்தவரை இளம் நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவதென்பது அவ்வளவு எளிதல்ல. அதுவும் தமிழ்த் திரையில் வலம் வருவதென்பது சுலபமானது அல்ல, அவ்வாறு தனது சுயமுயற்சியால் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் கதிர்.
இவர் முதல் படமான ‘மதயானைக் கூட்டம்’ படத்திலேயே சிறப்பான நடிப்பால் அனைவர் மத்தியிலும் அறியப்பட்டார், அப்படத்தில் வெளியான ‘கோணக் கொண்டைக் காரி'’ என்ற பாடல் தெரியாதவர் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அந்தப் பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்தது.
![நடிகர் கதிர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13124214_ka.jpg)
இவ்வாறு கிருமி, விக்ரம் வேதா, என இவரது பயணம் தொடரவே, புதுமுகமாக அறிமுகமாகிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இவருக்கு சிறந்த நடிகன் என்ற பெயர் கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அப்படம் சொல்ல வந்த கருத்தைச் சரியாக மக்கள் மத்தியில் நிலைநிறுத்தினார்.
அதேபோல் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவர் கைத்தேர்ந்தவர், இவர் நடித்த படங்கள் குறைவாக இருந்தாலும் கதாபாத்திரம் பேசும் அளவிற்குத் தன்னை தகவமைத்துக்கொள்வார்.
![பரியேறும் பொருமாள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13124214_kathi.jpg)
வித்தியாசமாக நடிக்க விரும்பும் நடிகர்கள் அதிகம் இருந்தாலும், அதில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு நடிப்பில் பட்டையை கிளப்பும் நடிகர் கதிர், இன்று தனது 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் இவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.