ETV Bharat / sitara

தமிழன் என்று சொல்லடா; தள்ளாடி நில்லடா - நடிகை கஸ்தூரி - மதுபான விற்பனை

தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை குறித்த பதிவு ஒன்றை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.

kasthuri
author img

By

Published : Oct 31, 2019, 1:30 PM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (அக்.26) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுவிற்பனை படுஜோராக நடைபெற்றது.

இதன் விற்பனை விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில், அக். 25ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ரூ.100 கோடிக்கும் அக்.26ஆம் தேதி சனிக்கிழமை ரூ.183 கோடிக்கும் தீபாவளியன்று ரூ.172 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மொத்தமாக தீபாவளி விடுமுறையில் ரூ.455 கோடிவரை மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இது கடந்த தீபாவளி மதுவிற்பனையை விட அதிகமாகும்.

kasthuri
நடிகை கஸ்தூரி ட்வீட்

இதையடுத்து, நடிகை கஸ்தூரி தனது சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ' டாஸ்மாக் ' மது விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளது.

அக்டோபர் 25 : ₹. 100 கோடி
அக்டோபர்-26 : ₹. 183 கோடி
அக்டோபர்-27 : ₹. 172 கோடி

ஆக மொத்தம் ₹. 455 கோடிக்கு மது பானங்கள் விற்கப்பட்டுள்ளது. " தமிழன் என்று சொல்லடா ; தள்ளாடி நில்லடா..!" என்று தெரிவித்துள்ளார்.

kasthuri
கஸ்தூரியின் ட்வீட்டுக்கு நெட்டிசன்களின் கருத்து

கஸ்தூரி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். தமிழன் மட்டும் தான் இதற்கு காரணமா என்று நெட்டிசன்கள் வழக்கம் போல் கஸ்தூரியின் கருத்தை விவாதப் பெருளாக மாற்றியுள்ளனர்.

Intro:தமிழன் என்று சொல்லடா ;
தள்ளாடி நில்லடா நடிகை கஸ்தூரியின் சர்ச்சைக்குரிய ட்விட்.Body:நடிகை கஸ்தூரி அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து சர்ச்சையில் சிக்கி கொள்வது வழக்கம். தற்பொழுது நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தீபாவளி அன்று மது விற்பனை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில்

' டாஸ்மாக் ' மது விற்பனையில் தமிழக அரசு புதிய சரித்திர சாதனை நிகழ்த்தியுள்ளது.

அக்டோபர் 25 : ₹. 100 கோடி
அக்டோபர்-26 : ₹. 183 கோடி
அக்டோபர்-27 : ₹. 172 கோடி

ஆக மொத்தம் ₹. 455 கோடிக்கு மது பானங்கள் விற்கப்பட்டுள்ளது.

" தமிழன் என்று சொல்லடா ;
தள்ளாடி நில்லடா..!"

என்று நடிகை கஸ்தூரி ' ட்விட்டர் '
பதிவிட்டுள்ளார். Conclusion:தமிழன் மட்டும் தான் இதற்கு காரணமா நெட்டிசன்கள் கேள்விக் கணை மற்றும் கஸ்தூரியின் கருத்துக்கள் இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.