நடிகர் கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சுல்தான்'. ட்ரீம் வாரியர் தயாரித்துள்ள, இதில் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், யோகி பாபு, கே.ஜி.எஃப். வில்லன் ராமச்சந்திர ராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ஷர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசை அமைத்துள்ளனர்.
சமீபத்தில் 'சுல்தான்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் இன்று (ஏப்ரல் 2) தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுடன் படம் பார்த்த கார்த்தி, ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
அப்போது கார்த்தியுடன் படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.