ETV Bharat / sitara

Farm Laws: 'ஓராண்டு போராட்டத்திற்குக் கிடைத்த வரலாற்று வெற்றி'

மூன்று புதிய வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெறுவதாக அறிவித்ததற்குத் திரையுலகினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி
கார்த்தி
author img

By

Published : Nov 19, 2021, 1:46 PM IST

ஒரு ஆண்டிற்கு மேலாக உழவர் போராட்டத்தின் எதிரொலியாக மூன்று வேளாண் சட்டங்களை (Farm Laws) அரசு திரும்பப் பெறுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 19) காலை அறிவித்தார்.

மேலும் டெல்லி எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழவரைப் போராட்டத்தைக் கைவிட்டுத் திரும்புமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டது குறித்து நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், "மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஓராண்டு இடைவிடாத போராட்டத்திற்குக் கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்.#FarmersProstest

    — Actor Karthi (@Karthi_Offl) November 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ், "என் தாய் நாட்டின் இடைவிடாது போராடும் உழவர் பெருமக்கள், மன்னரை மண்டியிட வைத்துள்ளனர்" என ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: Govt to Repeal Farm laws: இது உழவர்களுக்கு கிடைத்த பெரும் வெற்றி - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.