ETV Bharat / sitara

இந்தியன் 2 பட விபத்து - கமல்ஹாசனுக்கு சம்மன் - கோலிவுட் செய்திகள்

சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக கம்ல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
author img

By

Published : Mar 1, 2020, 9:59 PM IST

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இரவு, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற 'இந்தியன் 2’ படப்பிடிப்புத் தளத்தில் மின் விளக்குகளைத் தூக்கிச் செல்லும் ராட்சத கிரேன் அறுபட்டு விழுந்த விபத்தில், இயக்குநர் சங்கரின் உதவி இயக்குநர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்; 12 பேர் படுகாயமடைந்தனர்.

திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து, வரும் மூன்றாம் தேதி சென்னை வேப்பேரியிலுள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி நடிகர் கமல்ஹாசனை விளக்கம் அளிக்கக்கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், தொடர் விசாரணைக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார்.

இதையும் படிங்க: 'நம்முடன் சிரித்துப் பேசிய சிலர் இப்போது இல்லை' - லைகாவுக்கு 'இந்தியன்' கமல் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.