ஜீவா, வருண், ரியா சுமன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சீறு'. இப்படம் குறித்து நடிகர் ஜீவா பேசுகையில், தான் இதுபோன்ற நிறைய சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிகளில் அமர்ந்திருக்கும்போது சிறு தடுமாற்றம் ஏற்படும் என்றும் கூறினார். ஆனால் அந்த மேடை அப்படி இல்லாமல் நல்லதை செய்ததைப்போல் நிறைவாக உள்ளது என்றார்.
![actor jiiva about seeru in press meet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-seeru-pressmeet-jeeva-script-7204954_01022020231032_0102f_1580578832_333.jpg)
'83' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே 'சீறு' படத்தின் கதை தனக்கு சொல்லப்பட்டது என்றும் சரியான திட்டமிடுதல் இருந்ததால் '83' படத்திலும் சிக்கலில்லாமல் நடிக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
![actor jiiva about seeru in press meet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-seeru-pressmeet-jeeva-script-7204954_01022020231032_0102f_1580578832_288.jpg)
மேலும் இமானுடன் தான் தொடர்ந்து பணியாற்றிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறிய அவர், தானும் இசை கற்றுக்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டார். இசை மிகப்பெரிய கடல்; அதில் கால் வைக்கும்போதுதான் இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு எப்படி உயிர் கொடுக்கிறார்கள் எனத் தெரிவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: லாஸ்லியாவுடனான காதல் என்ன ஆனது? - கவினிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்