ETV Bharat / sitara

கோபி நயினார் இயக்கத்தில்ஜெய் - இயக்குநர் கோபி நயினார் படத்தில் ஜெய்

சென்னை: 'அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் நடிக்கவுள்ளார்.

jai
jai
author img

By

Published : Jul 29, 2021, 3:39 PM IST

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் ஜெய். அவரது இயல்பான நடிப்பிற்கென்று ரசிகர்கள் உண்டு.

ஜெய் தற்போது இயக்குநர் சுந்தர் C தயாரிப்பில், பத்ரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. அதில் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும்படியான காட்சிகளும் இருந்தது.

அதனை படமாக்கும்போது, எதிர்பாராதவிதமாக, ஜெய்யின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த பிசியோதெரபி குழு, அவரை ஓய்வெடுக்க சொன்னபோதும், அதை பொருட்படுத்தாமல், படக்குழுவின் நலன் கருதி, மீதியுள்ள ஆபத்தான காட்சிகளையும் நடித்து கொடுத்தார்.

jai
நடிகர் ஜெய்

இப்படத்தை தொடர்ந்து நயன்தாராவின் அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜெய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக சிறிது காலம் ஓய்வெடுத்து அந்தப்படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தை தொடர்ந்து, இயக்குநர் அட்லி எழுதி, தயாரித்து, அவரது உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மீண்டும் அட்லி படத்தில் இணைந்த ஜெய்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.