கரோனா ஊரடங்கால் திரைத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நடிகர் ஸ்ரீமன் சத்தமில்லாமல் உதவிவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கரோனா சமயத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று என்னுடைய குடும்பத்திடம் தெரிவித்ததும் என்னுடைய அப்பா, அம்மா, மனைவி ஆகியோர் தங்களிடம் இருந்த சேமிப்புப் பணத்தைக் கொடுத்தார்கள். இதுவரை குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் என்னால் உதவி செய்ய முடிந்தது.
இவை தவிர, நண்பர்கள் சிலர் உதவி செய்தார்கள். இதே போன்று மளிகைப் பொருள்களை லாப நோக்கமில்லாமல் பர்சேஸிங் விலைக்கே கடைகாரர்கள் கொடுத்தனர். வி.பி.ஆர் என்ற தொண்டு நிறுவனம் 140 நபர்களுக்கு 10 கிலோ அரிசி பையை கொடுத்தார்கள். ஊரடங்கு முடியும் தருவாயில் உதவி கேட்டு நிறைய பேர் வருகிறார்கள். அதுதான் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. தொடர்ந்து உதவி செய்ய ஆண்டவன் அருள் புரிவான் என்ற நம்பிக்கை இருக்கிறது' என்றார்.
இதையும் படிங்க... தன்னலம் பாராத நிவாரண உதவி - துணை நடிகரின் மனிதநேய சேவை