ETV Bharat / sitara

வரலட்சுமியின் 'டேனி' படத்தில் மர்மங்களை அவிழ்க்கும் போலீஸ் அலுவலர் - ஓடிடியில் ரீலசான தமிழ்ப் படங்கள்

ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள டேனி படத்தில் கதையின் நாயகியான வரலட்சுமிக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த வேடமாக இருந்தாலும் சரி, மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் துரை சுதாகர் கூறியுள்ளார்.

Actor Durai sudhakar
நடிகர் துரை சுதாகர்
author img

By

Published : Aug 1, 2020, 4:42 PM IST

சென்னை: வரலட்சுமி நடிக்கும் புதிய படமான 'டேனி'-இல், கொலை குறித்து மர்மங்களை கண்டறியும் காவல்துறை அலுவலராக நடித்துள்ளார் நடிகர் துரை சுதாகர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து, ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் 'டேனி'. இந்தப் படம் ஸீ5 ஓடிடி-இல் ஜூலை 31ஆம் தேதி வெளியாகியுள்ளது.

படத்தில் காவல்துறை அலுவலராக, ஒரு கொலை குறித்து புலனாய்வு செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார் வரலட்சுமி. அவருக்கு இணையான கேரக்டரில், வரலட்சுமியுடன் இணைந்து கொலை வழக்கில் உள்ள மர்மங்களை விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் துரை சுதாகர் நடித்துள்ளார்.

இவர் 'தப்பாட்டம்' என்ற படத்தில் தாடி, மீசையுடன் ஹீரோவாக தோன்றி பலரது கவனத்தை ஈரத்தார். அதேபோல் விமல் நடித்த 'களவாணி 2' படத்திலும் வில்லனாக தோன்றி மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து தற்போது வரலட்சுமியுடன் இணைந்து 'டேனி' படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி. முத்தையா தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் எல்.சி. சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார்.

Durai sudhakar in Danny movie
டேனி படத்தில் வரலட்சுமியுடன் நடிகர் துரை சுதாகர்

'டேனி' படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகர் துரை சுதாகர் கூறியதாவது:

ஒரு கொலை குறித்து புலனாய்வு செய்யும் அலுவலராக இந்தப் படத்தில் நடித்துள்ளேன். நானும், நடிகை வரலட்சுமியும் இணைந்து கொலை வழக்கு ஒன்றில் இருக்கும் பல மர்மங்களை விசாரணை மூலம் கண்டுபிடிக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறோம். கதையின் நாயகியான வரலட்சுமிக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த வேடமாக இருந்தாலும் சரி, மக்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார்.

கரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாவது அதிகரித்துள்ளது. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படங்களைத் தொடர்ந்து, தற்போது வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி திரைப்படம் ஓடிடி-இல் நேரடியாக ரிலீசாகியுள்ளது.

இதையும் படிங்க: ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி; ஐபோன் சர்ப்ரைஸ் கொடுத்த டாப்ஸி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.