ETV Bharat / sitara

இது தலைவர் திருவிழா: 'அண்ணாத்த' ட்ரெய்லர் பார்த்த மகிழ்ச்சியில் தனுஷ் - அண்ணாத்த திரைப்படம்

அண்ணாத்த திரைப்பட ட்ரெய்லரில் பழைய ரஜினியை பார்ப்பது போல் உள்ளதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

Annaatthe
Annaatthe
author img

By

Published : Oct 27, 2021, 8:03 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது. தெலுங்கில் 'பெத்தண்ணா' என்ற பெயரிலும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்தின் தமிழ், தெலுங்கு ட்ரெய்லர் இன்று (அக்.27) வெளியானது. இதில் ரஜினி காளையன் கதாபாத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவராக தோன்றியுள்ளார். மேலும் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணாக தோன்றும் காளையன் பாசத்தை திரையில் தெளித்துள்ளார்.

  • Annathe !!! Vintage rajinism!!! So excited to see thalaivar in muthu, arunachalam , padayappa vibes. Can’t wait to see his magic on screen yet again. Vaa saami !! This Diwali 🪔 💥 💥 💥 STORMING THE THEATRES இது தலைவர் திருவிழா

    — Dhanush (@dhanushkraja) October 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குஷ்பு, மீனா ரஜினியின் மாமா பெண்ணுங்களா தோன்றியுள்ளனர். ட்ரெய்லரில் ரஜினி குஷியான மனநிலையில், இளமை துள்ளலுடன் தோன்றியுள்ளார். நயன்தாராவுடன் ரஜினி தோன்று காட்சி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

ட்ரெய்லரில் ரஜினி, "நீ யாருங்கிறது, நீ சேத்து வைக்கிற சொத்துலையும், சுத்தி இருக்கவங்க உன் மேல வச்சியிருக்கிற பயத்லையும் இல்ல..நீ செய்ற செயல்லையும் பேச்சுலையும் இருக்கு...இது வேதவாக்கு. நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா அந்த சாமி இறங்கி வந்து அவளுக்கு துணையா நிக்கும்." போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அண்ணாத்த ட்ரெய்லரை இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் சமூகவலைதளத்தில் '#AnnaattheTrailer' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் தனது ட்விட்டரில், " அண்ணாத்த பழைய ரஜனிசம், தலைவரை பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது. முத்து, அருணாச்சலம், படையப்பா படத்தில் தலைவரை பார்த்த அதே உற்சாகம் தெரிகிறது. அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்க்க காத்திருக்க முடியவில்லை. இது தலைவர் திருவிழா" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சரவெடி சத்தம் உச்சம் தொட வெளியான 'அண்ணாத்த' ட்ரெய்லர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.