தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது 37ஆவது பிறந்தநாளை வரும் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றம் அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி ஆகிய பொருள்களை வழங்கியுள்ளனர்.
இவ்விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.