முன்னணி நாடகக் கலைஞர், வசனகர்த்தா, திரைப்பட நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் நெஞ்சு வலி காரணமாக நேற்று (ஜூன் 10) காலமானார்.
இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தும் சென்னை மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியும் வந்தனர். இந்நிலையில் இன்று (ஜூன் 11) அவரது இறுதி ஊர்வலம் தற்போது அவர் வீட்டில் இருந்து தொடங்கியுள்ளது.
பெசன்ட் நகரில் உள்ள மின் மாயனத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.