ETV Bharat / sitara

Radhe - சல்மானுக்கு வில்லனாகிறார் ’காதல்’ பரத்! - பரத்

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘ராதே’ (Radhe) படத்தில் பரத் ஒப்பந்தாமாகியுள்ளார்.

Actor Bharath
author img

By

Published : Nov 9, 2019, 5:02 PM IST

‘தபாங் 3’ படப்பிடிப்பை முடித்த கையோடு பிரபு தேவாவுக்கு அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார் சல்மான் கான். ‘ராதே’ (Radhe) என பெயரிடப்பட்ட இப்படத்தில் சல்மான் ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இதில் ஜாக்கி ஷெராஃப், ரந்தீப் ஹூடா, சோஹேல் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சல்மான் கானின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பரத் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பரத் தனது ட்விட்டர் பக்கத்தில், "Radhe படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சல்மான் பாய் உடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நனவாகியிருக்கிறது. இந்த வாய்ப்பை அமைத்துத் தந்த பிரபு தேவா மாஸ்டருக்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Radhe
Radhe team before confirming bharath

‘ராதே’ திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையொட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பிரபுதேவா இயக்கிய ‘Wanted' படத்தின் அடுத்தபாகம் எனக் கூறப்படுகிறது.

Intro:Body:

Actor Bharat to play villian in Salman Radhe movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.