சென்னை: நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்துக்கு லாஸ்ட் 6 ஹவர்ஸ் எனப் பெயர் வைத்துள்ளனர்.
இந்தப் படத்தை லேஷி கேட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, சுனிஷ் குமார் இயக்குகிறார். விவியா சன்த், அடில் இப்ராஹிம், அனுமோகன், பிரமிள் சித்தார்த், தயாரிப்பாளர் அனூப் காலித் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் சுனிஷ் குமார் கூறியதாவது:
'வெவ்வேறு துறையில் சிறந்து விளங்கும் நான்கு பேர் பெரிய திருட்டு செய்து வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதன்படி நான்கு பேரும் 6 மணி நேரத்தில் ஒரு திருட்டை முடிக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால், அங்கு எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. அவர் செய்த சம்பவத்தின் பின்னணி, திருடச் சென்றவர்களின் நிலைமையை பல திருப்பங்களுடன் கூறும் விதமாக லாஸ்ட் 6 ஹவர்ஸ் படத்தை உருவாக்கி வருகிறோம்.
தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகி வரும், இந்தப் படம் பரத்துக்கு பெயர் சொல்லும் படமாக அமையும். தமிழைப் போல் அவர் மலையாளத்திலும் நடிப்பால் தடம் பதிப்பார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளோம்’ என்றார்.
பரத் நடிப்பில் சமீபத்தில் வெளியான காளிதாஸ் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. படத்தில் பரத்தின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் இவர், தற்போது பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
சல்மான்கான் நடிக்கும் 'ராதே' திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
2 மில்லியன் அமெரிக்க டாலர் - மைக்கேல் ஜாக்சன் இளையமகன் வாங்கிய ஆடம்பர வீடு