ETV Bharat / sitara

'ஒரு முழுமையான சமூகம் எப்படி வாழவேண்டும் என்பதை இயற்கை கற்றுக் கொடுத்துள்ளது'

author img

By

Published : Apr 21, 2020, 7:20 PM IST

கரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி பரவிக்கொண்டிருக்கும் சூழலில் நடிகர் அசோக் குமார் கரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Actor Ashok kumar corona awareness video

நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா விழிப்புணர்வுக்காக நடிகர் அசோக் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'ஒரு பொய் சொன்னால் அது காட்டுத் தீப்போல் அனைவருக்கும் பரவிவிடும். ஆனால், அதே ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தால்தான் அது மக்களிடத்தில் சென்றடையும். அதனால் கரோனா வைரஸ் குறித்து நான் கூறுவது என்னவென்றால், கரோனா வைரஸ் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் என்று அதைப் குறித்து நிறைய வதந்திகள் உள்ளது. காற்றில் பரவுகிறது. தொட்டால் பரவுகிறது. தும்மினால் பரவுகிறது. இவற்றிலிருந்து நாம் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளப் போகிறோம் என்பதைவிட மனித குலத்தை பாதுகாக்க வேண்டும். அனைவரும் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட வேண்டும். சுய கற்பித்தலுக்கான ஒரு சூழல் இப்போது நிலவுகிறது. இதுவரை நாம் இந்த பூமியை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது இப்போது தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் இந்த பூமியும் தன்னைத் தானே எப்படி சுத்தமாக்கிக் கொள்கிறது என்பதையும் நாம் இப்போது பார்க்கிறோம். சுற்றுச்சூழல் தூய்மையாக உள்ளது. குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளது. விலங்குகள் அதிக சுதந்திரத்தை உணர்கின்றன. இது போன்ற நிறைய விஷயங்கள், இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான சமூகம் எப்படி வாழவேண்டும் என்பதை இயற்கை கற்றுக் கொடுத்துள்ளது. இதை உணர்ந்து நாம் இப்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், நமக்கு ஒன்றும் ஆகாது, நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆகாது என்ற அசட்டுத் தைரியம் வேண்டாம். வீட்டிலிருந்து உங்களுடைய உடல் நலனில் அக்கறை செலுத்தினால் சமூகத்திற்கு நீங்கள் மிகப்பெரிய உதவியை செய்கிறீர்கள்.

அடிக்கடி கை கழுவுதல், சானிடைசர் போட்டு கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதால் நாம் சுத்தமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை. நாம் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதுதான் முக்கியம். வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ வைரஸை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். இதனால் அடுத்தவர்களும் பாதிப்படைகின்றனர்.

அதனால், வீட்டில் இருங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். சாதி, மத, ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வு இல்லாமல் நாம் அனைவரும் ஒரே சூழ்நிலையில் இப்போது இருக்கிறோம். ஒருவருக்கு ஒருவர் மதிப்பளித்து சிரித்து சந்தோஷமாக வீட்டில் இருங்கள். முக்கியமாக நம் சமூகம் நல்ல முன்னேற்றம் அடைவதற்குப் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்' என்றார்.

நடிகர் அசோக் குமார்

இதையும் படிங்க... 'உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.