தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது புதிதல்ல. அந்தவகையில் தற்போது நடிகர் விஜயகுமாரின் பேரனும், அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, சரோவ் சண்முகம் இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு பணி மேற்கொள்கிறார், நிவாஸ் பிரசன்னா படத்திற்கு இசையமைக்கிறார்.
முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தையும் நடிகருமான அருண் விஜய் நடிக்கிறார். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.
சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆர்னவ் படத்தில் தனது பகுதிக்கான காட்சியில் டப்பிங் கொடுத்துள்ளார்.
-
It was a proud moment to watch my kid #ArnavVijay dubbing for his debut film Produced by @2D_ENTPVTLTD!!❤👍 #3GenerationFilm @Suriya_offl 🤗 pic.twitter.com/lPK3QZSx3e
— ArunVijay (@arunvijayno1) July 31, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It was a proud moment to watch my kid #ArnavVijay dubbing for his debut film Produced by @2D_ENTPVTLTD!!❤👍 #3GenerationFilm @Suriya_offl 🤗 pic.twitter.com/lPK3QZSx3e
— ArunVijay (@arunvijayno1) July 31, 2021It was a proud moment to watch my kid #ArnavVijay dubbing for his debut film Produced by @2D_ENTPVTLTD!!❤👍 #3GenerationFilm @Suriya_offl 🤗 pic.twitter.com/lPK3QZSx3e
— ArunVijay (@arunvijayno1) July 31, 2021
ஆர்னவ் விஜய் டப்பிங் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட அருண் விஜய், என் பையன் ஆர்னவ் தனது படத்துக்காக டப்பிங் கொடுப்பதை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.