அருண் விஜய், தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து திரை வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் தனது மைத்துனரும் பிரபல ஆக்ஷன் இயக்குநருமான ஹரி இயக்கும் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்காலிகமாக இப்படத்திற்கு '#AV33 ' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அம்மு அபிராமி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
-
Working on a rural script after ages with the magic-makers! #DirectorHari sir tops it off! Electrifying schedules ahead!
— ArunVijay (@arunvijayno1) August 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Few clicks from work for you all 😘 #AV33 @DrumsticksProd @0014arun #AnalArasu @johnsoncinepro @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Mln128Az3T
">Working on a rural script after ages with the magic-makers! #DirectorHari sir tops it off! Electrifying schedules ahead!
— ArunVijay (@arunvijayno1) August 9, 2021
Few clicks from work for you all 😘 #AV33 @DrumsticksProd @0014arun #AnalArasu @johnsoncinepro @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Mln128Az3TWorking on a rural script after ages with the magic-makers! #DirectorHari sir tops it off! Electrifying schedules ahead!
— ArunVijay (@arunvijayno1) August 9, 2021
Few clicks from work for you all 😘 #AV33 @DrumsticksProd @0014arun #AnalArasu @johnsoncinepro @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Mln128Az3T
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதிகளில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: டப்பிங் கொடுக்கும் ஆர்னவ் விஜய்: பெருமைப்படும் அருண் விஜய்