அருண் விஜய், தற்போது அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்டர்' படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து திரை வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் தனது மைத்துனரும் பிரபல ஆக்ஷன் இயக்குநருமான ஹரி இயக்கும் புதுப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு '#AV33 ' என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் அம்மு அபிராமி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
-
📽🎬 #AV33!!#DirectorHARI @priya_Bshankar @gvprakash @editoranthony @gopinathdop @DrumsticksProd @iYogiBabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami
— ArunVijay (@arunvijayno1) July 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">📽🎬 #AV33!!#DirectorHARI @priya_Bshankar @gvprakash @editoranthony @gopinathdop @DrumsticksProd @iYogiBabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami
— ArunVijay (@arunvijayno1) July 28, 2021📽🎬 #AV33!!#DirectorHARI @priya_Bshankar @gvprakash @editoranthony @gopinathdop @DrumsticksProd @iYogiBabu @prakashraaj @realradikaa @Ammu_Abhirami
— ArunVijay (@arunvijayno1) July 28, 2021
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கியது. அதனை தொடர்ந்து கரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை28) மீண்டும் தொடங்கியுள்ளதாக, அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தந்தையின் படபூஜைக்கு சர்ப்ரைஸாக சென்ற குட்டி அருண் விஜய்!