ETV Bharat / sitara

'வாழ்க விவசாயி' குறித்து மனம் திறந்த அப்புக்குட்டி...! - சிறப்புப் பேட்டி

author img

By

Published : Sep 16, 2019, 11:56 AM IST

நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'வாழ்க விவசாயி' படத்தில் நடித்த அனுபவம் குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பகிர்ந்துள்ளார்.

'வாழ்க விவசாயி' குறித்து பகிரும் அப்புக்குட்டி

தமிழ் சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் நடித்துவந்த நடிகர் அப்புக்குட்டி 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து 'அழகர்சாமியின் குதிரை' என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் தேசிய விருதும் பெற்றார்.

இந்த நிலையில், நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் அப்புக்குட்டி 'வாழ்க விவசாயி' என்ற புதிய படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அப்புக்குட்டியின் நிஜப் பெயர் சிவபாலன்.

வாழ்க விவசாயி படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் நமது ஈடிவி பாரத்துக்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அது குறித்துக் காணலாம்.

'வாழ்க விவசாயி' படத்தில் நடித்தது குறித்து...

நாட்டில் பற்றி எரிகிற விஷயங்களில் ஒன்றாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்னைகள். இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம்தான் 'வாழ்க விவசாயி'.

விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படத்தின் கரு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்னைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளேன்.

எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித்தந்தன. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது.

நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.இது மாதிரி கதையில் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய கதையாக 'வாழ்க விவசாயி' படம் அமைந்திருக்கிறது.

அந்தப் படத்தின் கதையைச் சொன்னபோதே, இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்துள்ள படம் இது.

ஒரு விவசாயியாக நடிக்கும் பொழுது என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்?

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயியின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும்.

சிறுவயதிலிருந்தே விவசாயம் எனக்குத் தெரியும்

நாற்று நடுவது, களையெடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வதுவரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும். எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நடிகை வசுந்தரா உடன் நடித்தது குறித்து...

கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது. அடுத்ததாக எனக்குள் எழுந்த கேள்வி... யார் கதாநாயகி என்பதுதான்.

ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு. படத்தின் நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னைவிட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது.

'பேராண்மை' படத்திலும் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது, பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவரது நிறத்தில் மாற்றங்கள் செய்து, மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள்.

உயரமான வசுந்தரா ஹீரோயின் என்றதும் கவலை ஏற்பட்டது

வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித்தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் படத்தில் காட்டியிருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தது பற்றி...

கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்துள்ளேன்

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்...

ஒருநாள் பரண் ஒன்றில் மீது கதாநாயகன், கதாநாயகி ஆகிய இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட் டைரக்டர் (கலை இயக்குநர்) அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாகக் கூறினார்.

முதல்நாள் நல்ல மழை பெய்திருந்தது. இதனால் பரண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன். அடுத்து வசுந்தரா ஏறியபோது அந்தப் பரண் சரிந்து விழுந்தது.

நான் விழுந்து, என் மீது அவர் விழுந்தார். என் மீது அவர் விழுந்ததைப் பார்த்து எனக்குப் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.

கீழே விழவிடாமல் வசுந்தராவை காப்பாற்றினேன்

ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன். தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், 'நீங்கள் நல்லவேளை என்னை காப்பாற்றிவிட்டீர்கள். நான் உங்கள் மீது விழுந்திருக்காவிட்டால், எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்' என்றார்.

விவசாயிகள் தற்போதைய சூழலில் சந்திக்கும் பிரச்னைகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

இந்தப் படம் விவசாயம் பற்றிய படம்தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி' படம் என்னை வாழவைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட, எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்கவைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித்தரும் என்று உறுதியாக நம்புகிறேன்.

Intro:நடிகர் அப்புகுட்டி சிறப்பு பேட்டிBody:வாழ்க விவசாயி படம் குறித்து

இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடிவெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் 'வாழ்க விவசாயி'.விவசாயிகள் வாழ்ந்தால் தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது .மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளேன் .

."எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது .நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது . அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது .எனக்கு மிகவும் பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை.

ஒரு விவசாயியாக நடிக்கும் பொழுது என்னென்ன பிரச்சனைகள்

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

நடிகை வசுந்தரா உடன் நடித்தது குறித்து

கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது .உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது .யார் கதாநாயகி என்பது தான் அது .ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.
நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது .அவர் என்னை விட உயரமாக இருப்பாரே .என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை . அவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது 'பேராண்மை'யிலும் நன்றாக நடித்திருந்தார் .ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது .அவர் உயரம் நிறம் மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை .அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடித்தது பற்றி

கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை .வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசியமான சம்பவம்

ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது .பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் . தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால் நீங்கள் நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந் நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும் என்றார்

விவசாயிகளுக்கு தற்போது உள்ள பிரச்சனைகளை கூறும் படமா

இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்

Conclusion:வீடியோ மோஜோ பில் அனுப்பி உள்ளேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.