ETV Bharat / sitara

வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ் சகோதரர் தற்கொலை - காவல்துறை விசாரணை - வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ்

புதுச்சேரி: யாரோ மிரட்டல் விடுத்ததன் காரணமாகவே தனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ் தனது சகோதரர் கனகசபையின் தற்கொலை குறித்து தெரிவித்துள்ளார்.

Actor anandaraj brother suicide in puducherry
Actor Anandaraj
author img

By

Published : Mar 6, 2020, 9:50 PM IST

புதுச்சேரி திருமுடி நகரைச் சேர்ந்த கனகசபை திரைப்பட நடிகர் ஆனந்த் ராஜ் சகோதரர் ஆவார். திருமணம் செய்து கொள்ளாமல் வட்டிக்கு பணம் கொடுப்பது, மாதச்சீட்டு பிடிப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டு தனியே வாழ்ந்து வந்த கனகசபை, தனது வீட்டில் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து உடற்கூறாய்வு செய்யப்பட்ட கனகசபையின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது அண்ணன் ஆனந்த் ராஜ், இன்று புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”எனது தம்பி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். தம்பியின் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதிய நான்கு கடிதங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவருக்கு யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர்.

Actor anandaraj brother suicide

இதுகுறித்து காவல்துறை விசாரணைக்கு பின் தெரியவரும். காவல்துறையினர் விரைவில் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஷாலின் ‘சக்ரா’ வெளியாகும் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.