இயக்குநர் பா. இரஞ்சித், ஆர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'.
வடசென்னையின் பாரம்பரிய விளையாட்டான குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக ஆர்யா உடற்பயிற்சி மேற்கொண்டு, தனது உடலைக் கட்டுமஸ்தாக மாற்றினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. சந்தோஷ் சிவன் இசையமைத்த இந்தப்படத்தை கே9 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக, இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை.22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரேவற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் மட்டுமல்லாது வேம்புலி, டான்சிங் ரோஸ், ரங்கன் வாத்தியார் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் வேம்புலி காதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கென், அஜித்தின் 'வீரம்', 'பாகுபலி', 'கேஜிஎஃப் பகுதி 1' ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வேம்புலி கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்ததையடுத்து இதனை அஜித்திற்கு சமர்ப்பணம் செய்வதாக ஜான் கொக்கென் சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு போன் செய்து பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மாரியம்மாவ புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி' - சார்பட்டா பரம்பரை நடிகை