’நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'.
ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கரோனா காலத்தில் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், கிரிக்கெட் ஸ்டேடியம் தொடங்கி, எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பெரியதிரை, சின்னத்திரை நடிகர்கள் என காண்பவர்களிடலாம் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர்.
தொடர்ந்து, நீண்ட நாள்களாக இப்படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஒரு பாடலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்களின் பார்வை தற்போது வலிமை படத்தின் டீசர், ரிலீஸ் தேதி பக்கம் திரும்பியுள்ளது.
இதனிடையே வலிமை படத்தின் டீசர் வரும் 23ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வலிமை டீசரை அஜித் பார்த்துவிட்டதாகவும், டீசரைப் பார்த்த அஜித், இயக்குநர் ஹெச்.வினோத்தை மனதாரப் பாராட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நதியா?