ETV Bharat / sitara

தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிதியளித்த அஜய் தேவ்கன் - Federation of Western India Cine Employees

தேசிய ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜய் தேவ்கன் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்த அஜய் தேவ்கன்

author img

By

Published : Apr 2, 2020, 1:43 PM IST

கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் தேசிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தியுள்ளார். இதனால் அனைத்து வித படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், சினிமா தொழிலை நம்பியிருக்கும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து Federation of Western India Cine Employees (FWICE) அமைப்பில் உள்ள 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அஜய் தேவ்கன் 51 லட்சம் ரூபாயை நிதியுதவியாக, அந்த அமைப்பின் தலைவர் பி.என் திவாரியிடம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த அமைப்பின் (FWICE) பொதுச்செயலாளர் பேட்டியளித்துள்ளார். அதில், “தினக் கூலித்தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வரும் நேரத்தில் அஜய் தேவ்கன் உதவி செய்ய முன்வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பண உதவி வழங்க விரும்பும் மற்றவர்களுக்கு, எங்களது வங்கி கணக்கு விவரங்களை வழங்கி வருகிறோம். தினசரி கூலித் தொழிலாளர்களுக்கு உதவ அதிகமான மக்கள் முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கேசரி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இயக்குநர் சுசீந்திரன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.