கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகள் வைத்து சாப்பிட கொடுத்ததில் யானை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யானையின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சிம்ரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நெஞ்சமே நொறுங்கிவிட்டது. இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது. விலங்குகள் மீதான வன்முறை என்பது மிகவும் கொடுமையானது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இச்செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.