சென்னையில் நடைபெற்ற குறுந்திரை போட்டியில் இயக்குநர் ஆனந்த ரமணன் இயக்கிய ஆறாம் நிலம் வெற்றிபெற்றது. இது குறித்து ஆனந்த் ரமணன் கூறுகையில், "2009ஆம் ஆண்டு சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இரண்டு தரப்பினருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உயிர்பிழைத்தோர் ஏராளமானோர் அந்நாட்டு அரசிடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்தவர்கள் பலர் இன்றுவரை என்ன ஆனார்கள் என்றும், எப்படி இருக்கிறார்கள் என்றும் யாருக்குமே தெரியவில்லை.
அவர்களது குடும்பத்திற்குமே இது குறித்து தெரியாது. இதனை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நம்மூரில் நூறு நாள் வேலையைப் போல கண்ணிவெடி அகற்றும் பணிகளை அங்குள்ளோர் நாள்தோறும் செய்துவருகின்றனர்.
இந்தநிலையில், காணாமல்போன தனது கணவரை கண்டுபிடிக்க அரசிடம் வலியுறுத்திவரும் ஒரு மனைவியின் பார்வையில் 'ஆறாம் நிலம்' எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள வீடுகள், மனிதர்கள், சிதிலமடைந்த இடங்கள் என அனைத்தும் அற்புதமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அரசு இவர்களை ஏமாற்றுவது என இவர்களின் வலிகளை இப்படம் பேசியுள்ளது. இப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி சமூக வலைதளமான யூ-ட்யூபில் வெளியாகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஈழ பின்னணி திரைப்படம்: 'சினம் கொள்’ தணிக்கையில் புதிய சாதனை