ETV Bharat / sitara

கெளதம் கார்த்திக்கின் இந்த குணம் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் - தயாரிப்பாளர் ரங்கநாதன் - கௌதம் கார்த்திக் படங்கள்

சென்னை: கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும், 'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

AVV
AVV
author img

By

Published : Aug 3, 2021, 5:03 PM IST

'ஒரு கல்லூரியின் கதை', 'மாத்தியோசி', 'ஜிகினா' உள்ளிட்டப் படங்களை இயக்கிய நந்தாபெரியசாமி, தற்போது கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிவரும் படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில், கௌதம் கார்த்திக், சேரன், சிநேகன், சிங்கம் புலி, சரவணன், சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சித்து குமார் இசையமைக்க, போரா பரணி ஒளிப்பதிவு செய்கிறார்.

குடும்பப் படம்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் - நடிகர் பார்த்திபன், நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக உருவாகும் குடும்ப திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இப்படம் உருவாகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திண்டுக்கல் மாவட்டம், சிவகாசி போன்ற இடங்களை சுற்றி நடைப்பெற்றுவந்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

aanandham
ஆனந்தம் விளையாடும் வீடு படப்பிடிப்பு நிறைவு

படம் குறித்து தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறியதாவது. 'ஆனந்தம் விளையாடும் வீடு' படம், பல ஆண்டுகளுக்கு பிறகு, எனது வாழ்வில் எனக்கு மிகவும் நெருக்கமான, சிறப்பான படமாக அமைந்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு காலத்தில், சிக்கலான நேரத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. பல தடங்கல்களை சந்தித்து படக்குழுவினரின் கடின உழைப்பினாலும், உதவியாலும் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் பங்கேற்றுள்ளனர். இவர்களின் ஒத்துழைப்பால் மட்டுமே, படப்பிடிப்பை விரைவில் முடிக்க சாத்தியமானது. நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்து கொடுத்தார். இதை நான் என் ஆழ்மனதில் இருந்து கூறுகிறேன்.

படப்பிடிப்பில் ஏற்ற இறக்கம் காட்டாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக, மரியாதையுடன் நடந்து கொண்டது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த மாதிரியான குணத்தை, இவரை தவிர வேறு எந்த நடிகரிடமும் நான் கண்டதில்லை. இந்த குணம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு போகும்.

நடிகர், இயக்குநர் சேரன் அவர்களின் பங்கேற்பு இந்தப் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது.

சேரனின் கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக தனி இடம் பிடிக்கும். நடசத்திர பட்டாளத்தை ஒன்றிணைத்து, இந்த படத்தை உருவாக்கிய இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு நான் பெரிதும் கடமை பட்டுள்ளேன். அவரின் உதவியால் தான் இந்தப் படத்தை இவ்வளவு விரைவில் முடிக்க முடிந்தது என்றார்.

'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'ஆனந்தம் விளையாடும் வீடு' படப்பிடிப்பு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.