ETV Bharat / sitara

தமிழ்க் குடும்பங்களுக்கான திரைப்படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு' - குடும்பங்களுக்கான திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு

தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை 'ஆனந்தம் விளையாடும் வீடு' போக்கும் என அப்படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

avv
avv
author img

By

Published : Sep 24, 2021, 10:22 AM IST

நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குநர் சேரன் இணைந்து நடிக்கும் 'ஆனந்தம் விளையாடும் வீடு' தமிழில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு பெரும் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க குடும்பப் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீ வாரி ஃபிலிம் தயாரிப்பாளர் ரங்கநாதன் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் முழுப் பணிகளும் முடிவடைந்து, படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்நிலையில் நந்தா பெரியசாமி, ரங்கநாதன் இருவரும் பத்திரிகையாளரைச் சந்தித்தனர்.

ஏழு அண்ணன் தம்பிகளின் கதை

அப்போது தயாரிப்பாளர் ரங்கநாதன் கூறுகையில், "'தர்மபிரபு' படத்திற்குப் பிறகு இது எனது இரண்டாவது படம். நந்தா பெரியசாமி முதலில் வேறொரு கதைதான் சொன்னார். ஆனால் அது எனக்குச் சரிவரும் எனத் தோன்றாததால் வேறொரு கதை கேட்டேன், அப்படி இவர் சொன்னதுதான் ஆனந்தம் விளையாடும் வீடு.

ஏழு அண்ணன்-தம்பிகளின் கதை. மிக வித்தியாசமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஒப்புக்கொண்டு இப்படத்தை ஆரம்பித்தேன். மிக நல்லதொரு படமாக, இப்படத்தை நந்தா பெரியசாமி உருவாக்கியுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

குடும்பங்களுக்கான திரைப்படம்

தயாரிப்பாளரைத் தொடர்ந்து நந்தா பெரியசாமி கூறியதாவது, "'ஆனந்தம் விளையாடும் வீடு' பொதுமுடக்கத்திற்கு முன் தொடங்கப்பட்ட படம். 35 நட்சத்திரங்களுக்கு மேல் வைத்து இப்படத்தை ஆரம்பித்தோம். பெரும் தடைகள் பலவற்றைத் தாண்டி இப்படத்தை முடித்துள்ளோம்.

சேரன், சரவணன், கௌதம் கார்த்திக் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பொதுமுடக்க காலத்தில் தயாரிப்பாளர் முழு அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்க ஒத்துழைப்புத் தந்தார். இப்படம் நன்றாக வர முழு முதல் காரணமும் தயாரிப்பாளர்தான். தமிழில் குடும்பங்களுக்கான திரைப்படம் வராத ஏக்கத்தை இப்படம் போக்கும்.

ஒன்றாக இருக்கும், ஒரு குடும்பத்தில் சூழலால் வரும் பிரச்சினைகளைத் தாண்டி அண்ணன்- தம்பிகள் எப்படி ஒன்று சேருகிறார்கள், நாயகன் எப்படி அவர்களை ஒன்றுசேர்க்கிறார் என்பதுதான் கதை. ஷிவத்மிகா ராஜசேகர் நாயகியாக அறிமுகமாகிறார்.

படப்பிடிப்பில் எல்லோருமே ஒரு குடும்பம்

அவருக்கு நன்றாகத் தமிழ் தெரிந்திருந்தது படப்பிடிப்பில் உதவியாக இருந்தது. நன்றாக நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். நடிகர் கௌதம் கார்த்திக் இப்படத்தில், எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்து, மிக அர்ப்பணிப்புடன் படத்தை முடித்துக் கொடுத்தார்.

படப்பிடிப்புக்கு முதல் ஆளாக வந்துவிடுவார். படப்பிடிப்பில் எல்லோருமே ஒன்றாக ஒரு குடும்பம்போல்-தான் இருந்தோம். படமும் எல்லோரும் கொண்டாடும் படமாக இருக்கும் உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள்" என்றார்.

'ஆனந்தம் விளையாடும் வீடு' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் எனத் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கெளதம் கார்த்திக்கின் இந்த குணம் புகழின் உச்சிக்கு கொண்டு செல்லும் - தயாரிப்பாளர் ரங்கநாதன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.