சென்னை: நடிகர் பரத் நடிப்பில் உருவாகும் 'காளிதாஸ்' படத்தில் கவியரசு கண்ணதாசனின் பேரனும் நடிகருமான ஆதவ் கண்ணதாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் 'காளிதாஸ்'. காவல் துறை அலுவலராக பரத் நடித்துள்ள இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 'காளிதாஸ்' படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இதனிடையே இந்தப் படத்தில் பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞரசர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் பரத்திற்கு வில்லனாக நடித்துள்ளார். இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆதவ், பின்பு 'பொன் மாலைப் பொழுது' திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.
![Kaalidas](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5037097_bharath.jpg)
அதன்பின் கிருஷ்ணா, ஓவியா நடிப்பில் வெளியான 'யாமிருக்க பயமேன்' பேய் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றிய அவர் நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் வேறு படத்தில் நடிக்காமல் இருந்தார். இதனிடையே தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ள அவரது இந்த முடிவு ஆதவிற்கு கைக்கொடுக்கமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.