அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு அளிக்கப்பட்ட இரவு விருந்தில் ராஜ்பவனில் குரங்கு ஒன்று வந்ததை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் உள்ளிட்டோருடன் 36 மணி நேரம் இந்தியாவில் பயணம் செய்தனர். அகமதாபாத் நகருக்கு வந்திறங்கிய அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரமம், தாஜ் மஹால் உள்ளிட்டவற்றை சுற்றிப் பார்த்தனர்.
பின் அவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து இரவு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் ட்ரம்ப்புடன், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், பிரபல சமையல் கலைஞர் விகாஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்காக அமெரிக்க சுவையுடன் கூடிய இந்திய உணவு வகைகள் அடங்கிய மெனு தயாரிக்கப்பட்டது. சைவ மற்றும் அசைவத்தை உள்ளடக்கிய உணவுப்பட்டியலில், சால்மன் மீன் டிக்கா, ஆலோ டிக்கி, கீரை சாட் மற்றும் பலவகையான சூப்களுடன் விருந்து இருந்தது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அப்போது அங்கு குரங்கு ஒன்று வந்து அங்கிருந்த பூச்செடியில் இருந்த பூவைப் பறித்து தின்றது. இதைப் பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். மேலும் அதில், எங்களது சிறிய நண்பரும் இரவு உணவு உட்கொண்டிருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து எங்களின் சூப்பர் ஹீரோவை சந்திப்பதற்கு வாய்ப்பளித்த குடியரசுத்தலைவருக்கு நன்றி என்றும் அதில் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.