ETV Bharat / sitara

'வில்லனா.. ஹீரோவா முக்கியமில்ல.. நீடித்து நிற்கவே ஆசை'- '90 ML' தேஜ் ராஜ்

"ஹீரோவா, வில்லனா என்பது முக்கியமில்லை. சினிமா துறையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்துள்ளேன்" என்று "90 எம்எல்" பட நடிகர் தேஜ் ராஜ் தெரிவித்தார்.

தேஜ் ராஜ்.
author img

By

Published : Mar 18, 2019, 7:18 PM IST

ஓவியா நடிப்பில் மார்ச் 1ஆம் தேதி வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்த படம் '90 எம்எல்' . இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை ஓவியாவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு ஓவியாவும் பதிலடி கொடுக்கும் வகையில், 'ஆமா நான் அப்படித்தான் நடிப்பேன்.. படத்தை படமாக பாருங்கள்' என்று காரசாரமாக கூறினார்.

90 ML actor
தேஜ் ராஜ்.

தமிழ் திரையுலகில் 80 காலக்கட்டத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் சரண்ராஜ் . அவரின் மகன் தேஜ்ராஜ் '90 எம்எல்' படத்தில் ரவுடி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.

"இப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும் '90 எம்எல்' திரைப்படம்தான் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது" என்று, தேஜ் ராஜ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

"சின்ன வயதிலிருந்தே சினிமாவிற்குள் வரவேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதிக படங்களை பார்த்து தன்னை வளர்த்துக் கொண்டேன். படிப்பிலும் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பில் சேர வேண்டும் என்பதற்காகவே விஸ்காம் படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன். இதுதவிர சினிமா துறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல்வேறு பயிற்சிகளும் தனக்கு தேவைப்பட்டன.

இதனால், பிரபல நடன இயக்குனர்கள் ரகுராம் ஸ்ரீதர் ஆகியோரிடம் நான் முறையாக நடனம் கற்றுக் கொண்டேன். பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி பெற்றேன். நடிப்புத்திறனை வளர்த்துக்கொள்ள கூத்துப்பட்டறை, பாலுமகேந்திரா இன்ஸ்டியூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கற்றுக்கொண்டு என்னை முழுவதுமாக சினிமாவிற்காக தயார்படுத்திக் கொண்டுதான் சினிமாவிற்கு நடிக்க வந்தேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில் 'தான்நடித்து வெளிவந்துள்ள 90 ML பட வாய்ப்பு எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இது எனக்கு சந்தோஷமா இருக்கு. சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் இருக்கிறது அதற்கான முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறேன்' என்று தெரிவித்தார். மேலும், ஹீரோவா வில்லனாஎன்பது முக்கியமில்லை. சினிமா துறையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்றார்.

அடையாளம் கொடுத்த 90 ML - நடிகர் தேஜ் ராஜ்.

தமிழ் திரைஉலகில் 80களில்  வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து  பெயர் பெற்றவர் நடிகர் சரண்ராஜ் . அவரின் மகன் தேஜ்  ராஜ் 90 ML  படத்தில்  ரவுடி கதாபாத்திரத்தில் நாயகனாக அறிமுகமானார். அறிமுகப் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார். 

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய 90 ML படம் தான் தனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்று கூறியிருக்கிறார் .

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்

 சின்ன வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு அதனால் அதிக படங்களை பார்த்து எனது ஆர்வத்தை நான் மேலும் வளர்த்துக் கொண்டேன். படிப்பிலும் நான் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பான விஸ்காம் தேர்ந்தெடுத்து படித்தேன். இவை தவிர சினிமா துறையில் வெற்றி பெற வேண்டும் என்றால் பல்வேறு பயிற்சிகளும் தேவைப்பட்டது பிரபல நடன இயக்குனர்கள் ரகுராம் ஸ்ரீதர் ஆகியோரிடம் நான் முறையாக நடனம் கற்றுக் கொண்டேன் அதேபோன்று பாண்டியன் மாஸ்டரிடம் சண்டைப்பயிற்சி பெற்றேன்.
நடிப்புத்  திறனை மேம்படுத்த கூத்துப்பட்டறை ,பாலுமகேந்திரா இன்ஸ்டிட்யூட் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நடிப்பு பள்ளி ஆகியவற்றில் நடிப்பை கற்றுக் கற்றுக்கொண்டு என்னை முழுவதுமாக சினிமாவிற்காக தயார்படுத்திக் கொண்டு தான் சினிமாவிற்கு நடிக்க வந்தேன் என்று தெரிவித்தார்.

இப்போது நான் நடித்து வெளிவந்துள்ள 90 ML பட வாய்ப்பு எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இது எனக்கு சந்தோஷமா இருக்கு சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் இருக்கிறது அதற்கான முயற்சியிலும் தற்போது ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்தார் 

தற்பொழுது நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வந்தாலும் அவைகளை சிறப்பு கவனம் எடுத்து தேர்ந்தெடுத்து தான் நான் நடிக்க உள்ளேன். ஹீரோவா வில்லனா என்பது என்பது முக்கியமில்லை. சினிமா துறையில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.