கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் ராட்சசன். விஷ்ணு விஷால், அமலாபால், காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து, சைக்கோ த்ரில்லர் பாணியில் அமைந்திருந்த இந்தப் படத்தின் மிரட்டலான திரைக்கதை பெரிதும் பேசப்பட்டது.
படத்தில் வில்லனாக சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரவணன் என்பவரின் நடிப்ப பாராட்டுகளைப் பெற்றது. முண்டாசுபட்டி புகழ் ராம்குமார் இயக்கியிருந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த இந்தப் படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. தெலுங்கில் ராட்சசடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
![#Ratsasan wins 4 awards at LosAngelesFilmAwards #LAFA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4634042_best-picture-ratchasan-2.jpg)
இதையடுத்து அமெரிக்காவில் புகழ்பெற்ற லாஸ் ஏஞ்சலிஸ் திரைப்பட விருதுகள் விழாவில் ராட்சசன் திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன. அதன்படி சிறந்த படம், சிறந்த நடிகர் - விஷ்ணு விஷால், சிறந்த த்ரில்லர், சிறந்த இசைமைப்பாளர் - ஜிப்ரான் என நான்கு பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.
![#Ratsasan wins 4 awards at LosAngelesFilmAwards #LAFA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4634042_best-picture-ratchasan-7.jpg)
தேசிய விருதில் ராட்சசன் போன்ற சிறந்த தமிழ்ப் படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.
![#Ratsasan wins 4 awards at LosAngelesFilmAwards #LAFA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4634042_best-picture-ratchasan-6.jpg)