கரோனா தொற்று காரணமாக பிரபல திரைப்பட விழாவான கேன்ஸ் விருது விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலக சினிமாக்களில் ஆஸ்கர் விருது விழாவுக்குப் பின் அதிகம் கவனிக்கப்படும் விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் சிட்டியில் நடைபெறும் கேன்ஸ் விருது வழங்கும் விழா. இதில் விருது வாங்கும் படங்கள் உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் தரமான படைப்பாக இருக்கும் என நம்பிக்கை உண்டு. இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விருது விழா மே 12 முதல் மே 28 வரை நடைபெற இருந்தது.
-
Due to the health crisis and the development of the French and international situation, the Festival de Cannes will no longer be able to take place on the dates planned, from May 12 to 23. More info #Cannes2020 👉 https://t.co/peLmfw0gQW pic.twitter.com/SVWPasvU23
— Festival de Cannes (@Festival_Cannes) March 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Due to the health crisis and the development of the French and international situation, the Festival de Cannes will no longer be able to take place on the dates planned, from May 12 to 23. More info #Cannes2020 👉 https://t.co/peLmfw0gQW pic.twitter.com/SVWPasvU23
— Festival de Cannes (@Festival_Cannes) March 19, 2020Due to the health crisis and the development of the French and international situation, the Festival de Cannes will no longer be able to take place on the dates planned, from May 12 to 23. More info #Cannes2020 👉 https://t.co/peLmfw0gQW pic.twitter.com/SVWPasvU23
— Festival de Cannes (@Festival_Cannes) March 19, 2020
இதனையடுத்து 73ஆவது கேன்ஸ் திரைப்படவிழா, உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக விழா குழு அறிவித்துள்ளது.
இது குறித்து விழாக் குழுவின் தலைவர் ஸ்பைக் லீ கூறுகையில், ”சினிமா விழாவின் முக்கிய விழாவான கேன்ஸ் திரைப்பட விழாவை தற்போதைய சூழல் காரணமாக ஒத்திவைக்கிறோம். உலகளவில் பல விஷயங்களும் நிகழ்சிகளும் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ், கேன்ஸ் சிட்டி நிர்வாகக் குழு கூறும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் நாங்கள் பின்பற்றுகிறோம். கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் இந்தத் திரைப்பட விழா ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்தப்படலாம். இந்த வருட கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.