இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தானாவை 2 கோடி பேர் பாலோ செய்கின்றனர். தென்னிந்திய நடிகைகளில் அதிக பேர் பாலோ செய்யும் நடிகையாக ராஷ்மிகா இருக்கிறார்.
பிரபலங்களை பலரும் பின்தொடர்வது வழக்கமான ஒன்றுதான். எனினும் சிலருக்குதான் மிக அதிகமான பாலோயர்ஸ் இருப்பார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுக்கே பெரும்பாலும் பாலோயர்ஸ் அதிகமாக இருக்கும். அந்த வகையில் ராஷ்மிகாவை தற்போது 2 கோடி பேர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.
ராஷ்மிகா ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். ராஷ்மிகா தற்போது ‘மிஷன் மஜ்னு’, ‘குட்பை’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரவுள்ளது.
இதையும் படிங்க: சமையல் கற்றுக்கொள்ளும் ஹரிஷ் கல்யாண்