இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் 17ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் மூத்த நடிகரும், இயக்குனருமான சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், நடிகர் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையில் நடைபெரும் சர்வதேச திரைப்பட விழாவின் மூலம் அனைத்து நாடுகளின் பண்பாடு கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளலாம். தமிழ்நாடு அரசு திரைப்பட விழாவிற்கு 75 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படங்கள் அதிகமாக திரையிடப்படவேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அடுத்த ஆண்டு சென்னையில் நடைபெரும் 18ஆவது சர்வதேச திரைப்பட விழாவிற்கு அரசு தரப்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதற்கு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க...19ஆம் தேதி வரை நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 55 நாடுகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.