ETV Bharat / sitara

புதிதாகப் பிறந்திட நான் புத்தனில்லை வழிவிடு - #15YearsOfPudhupettai - தனுஷின் புதுப்பேட்டை

வலியது பிழைத்து வாழும் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் இப்படத்தின் மையக்கரு என செல்வா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரு அறிவியல் கோட்பாட்டை மையமாக வைத்துதான் செல்வராகவன் இந்தக் கதையை எழுதினாரா? என்று அவரிடம் கேட்டால்தான் தெரியும். ஆனால், புதுப்பேட்டை படம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அந்த வகையில் அது தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கிறது.

pudhupettai
pudhupettai
author img

By

Published : May 26, 2021, 8:52 PM IST

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'புதுப்பேட்டை' திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படங்களில் 'புதுப்பேட்டை' படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. புதுப்பேட்டைக்கு முன், புதுப்பேட்டைக்கு பின் என கேங்ஸ்டர் திரைப்படங்களை வரையறுக்கலாம் என சில சினிமா விமர்சகர்கள் சொல்வதுண்டு. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்த இத்திரைப்படம், 2006 மே 26 அன்று வெளியானது.

pudhupettai
கொக்கி குமார் அரசியல் பயணம்

'புதுப்பேட்டை' வெளியான சமயம் அப்படத்துக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதற்கு முந்தைய செல்வராகவன் படம்போல் இத்திரைப்படம் இல்லை, கேங்ஸ்டர் கதையை ஜவ்வாக இழுத்திருக்கிறார் என எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. எனினும், படம் வணிக ரீதியாக தோல்வியைச் சந்திக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தை பார்த்தவர்கள், இதனை பெரிதும் கொண்டாடத் தொடங்கினார்கள். அதன்பிறகு மீண்டும் இந்தப் படத்தை பார்த்துவிட்டு மிகச்சிறப்பான அளவில் விமர்சனம் எழுதிய சினிமா விமர்சகர்களும் இங்கு இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முக்கியமான ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டது யுவனின் இசை, ஹாலிவுட் ரேஞ்சில் இசையமைத்திருக்கிறார் எனப் பலரும் பாராட்டினர்.

pudhupettai
புதுப்பேட்டை படத்தொகுப்பு

தனுஷ் திரையுலகப் பயணத்தில் இது மாபெரும் திருப்புமுனையாக அமைந்த படம். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனுஷிடம், ’நீங்கள் இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதுதான், வாழ்நாள் கனவு என்றால் எந்தக் கதாபாத்திரத்தை சொல்வீர்கள்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. தனுஷ் சற்றும் யோசிக்கமால், அப்படி கதாபாத்திரம் எதுவும் இனி இல்லை, நான் ஏற்கெனவே அதில் நடித்துவிட்டேன், அதுதான் புதுப்பேட்டை 'கொக்கி குமார்' என்றார். கொக்கி குமார் என்ற கதாபாத்திரமாக தனுஷ் வாழ்ந்திருப்பார். ஸ்கூல் பையன், போதை பொருள் விற்பவன், கேங்ஸ்டர், அரசியல்வாதி என தனுஷின் கதாபாத்திர மாற்றங்களை மையமாகக் கொண்டு கதை விரியும்.

புதுப்பேட்டை - survival of the fittest

வலியது பிழைத்து வாழும் என்ற டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் இப்படத்தின் மையக்கரு என செல்வா ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரு அறிவியல் கோட்பாட்டை மையமாக வைத்துதான் செல்வராகவன் இந்தக் கதையை எழுதினாரா? என்று அவரிடம் கேட்டால்தான் தெரியும். ஆனால், புதுப்பேட்டை படம் பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. அந்த வகையில் அது தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கிறது.

pudhupettai
கொக்கி குமார்

அம்மாதான் உலகம் என மகிழ்ச்சியாக சுற்றித் திரியும் ஸ்கூல் பையன் குமாரு, தன் தந்தையால் தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதைப் பார்க்கிறான். தந்தையை விட்டு தப்பித்து ஓடி, பிழைத்துக் கிடந்தால் போதும் என பிச்சை எடுக்கத் தொடங்குகிறான். தவறுதலாக ஒரு கேங்ஸ்டர் கும்பலுடன் குமாரை போலீஸ் கைது செய்கிறது. அதன்பிறகு அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் படத்தின் கதை.

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே..

தாய்க்கு பின் குமாருக்கு கிடைக்கும் முதல் பெண்ணின் பாசம் கிருஷ்ணவேணியுடையது. அவள் பாலியல் தொழில் செய்யும் பெண் என்பது தெரிந்தேதான் அவளை கண்மூடித்தனமாக காதலிக்கிறான். அவள் மீது கொண்ட காதலால், தனது தலைவன் அன்புவை கொலை செய்து, அவன் இடத்தை அடைகிறான், கொக்கி குமார். கிருஷ்ணவேணியால் உருவாகிறான், குமார்.

pudhupettai
கிருஷ்ணவேணி - குமார்

இளம் பருவத்தில் கிருஷ்ணவேணி மீது காதல் கொண்ட குமார். தனது கனவுக் கன்னியாக செல்வியை நினைக்கிறான். தன் அதிகாரத் திமிரில் நண்பனின் தங்கையான செல்வியை அடைந்த குமார், அதனால் சரிவைச் சந்திக்கிறான். செல்வியை மணந்த பிறகுதான் குமாரின் சாம்ராஜ்ஜியம் அழியத் தொடங்கும்.

தமிழ் சினிமாவில் இதே கான்சப்டில் ஆயிரம் படங்கள் வந்திருக்கும். அதில் 'புதுப்பேட்டை' ஒரு தரமான சம்பவம். அதேசமயம் அரசியல் சார்ந்தும் இத்திரைப்படம் தீவிரமாகப் பேசியிருந்தது.

pudhupettai
செல்வி - சோனியா அகர்வால்

சாகும் காலம் வரை இது விதியே

அதிகாரவர்க்கம் அடிதட்டு மக்களை தங்கள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக்கொள்வது பற்றியும் இப்படம் தெளிவான பார்வையை முன் வைக்கிறது. தனது உண்மைத் தொண்டனாக இருந்த அன்புவை குமார் கொலை செய்ததற்கு தமிழ்ச்செல்வன் கதாபாத்திரம் பெரிதாக கவலைப்படமாட்டார். அடுத்த தேர்தலுக்கு பணம் கொடுப்பதற்கு ஆள் இல்லை என வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார். அந்த இடத்தில் அன்புவை கொலை செய்து குமார் வருவதிலும் அவருக்குப் பிரச்னை இருக்காது. தமிழ்ச்செல்வனுக்கு அன்பும் குமாரும் ஒன்றுதான். குமாருக்கு அரசியல் ஆசை தலையெடுக்கவும், தமிழ்ச்செல்வன் அவனை தூக்கி எறிந்துவிடுவார்.

pudhupettai
அன்பு கொல்லப்படும் காட்சி

ஆசை ஓயுமா, அறிவு கேட்குமா, சாகும் காலம் வரை இது விதியே காற்று, நீர், நிலம், கண்கள் காண்பதும், உனது என்றுதான் மனம் சொல்லுமே ...இந்தப் பாடல் வரிகள் குமாரின் அரசியல் ஆசையை விளக்குவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

pudhupettai
தமிழ்ச்செல்வன் - கொக்கி குமார்

தீயோடு போகும் வரையில் தீராது இந்தத் தனிமை..

ஆரம்பத்தில் தாயை இழந்து ஆதரவற்றவனாக அலையும் குமார், படத்தின் இறுதியிலும் அதே நிலையில் இருப்பான். தன்னுடைய நிலையை நினைத்துப் பார்க்கும் குமார், வில்லன் மூர்த்தியின் பிணத்தை கட்டிப்பிடித்து அழுவது போல் காட்சியமைக்கப்பட்டிருக்கும். புதுப்பேட்டை படத்தை இப்படி சிலாகித்துக் கொண்டே போகலாம், ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் அதன் தாக்கம் தொடரும்...

pudhupettai
கொக்கி குமாரின் அரசியல் ஆசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.