நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தை வைத்து ஹெச். வினோத் வலிமை படத்தை இயக்கிவருகிறார். இப்படம் குறித்து நீண்ட நாள்களாக எந்தவித அப்டேட்டும் வராமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் செல்லும் இடமெல்லாம் யாரைப் பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டுவந்தனர்.
படத்தின் மோஷன், ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இதனையடுத்து 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை 11ஆம் தேதி வெளியானது.

வலிமை மோஷன் போஸ்டரை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர். மேலும், மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே ட்விட்டரில் #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.
2 நாளில் 10 மில்லியன்
இந்நிலையில் யூடியூப்பில் மோஷன் போஸ்டர் வெளியான 2 நாள்களில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் யூடியூப்பில் இந்திய அளவில் அதிக லைக்குகளைப் பெற்ற மோஷன் போஸ்டர் என்ற சாதனையையும் 'வலிமை' பெற்றுள்ளது.
இதனை ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கமான ட்விட்டரில் #MostLikedIndianMPValimai என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் விவரம் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு