80களில் தொடங்கி இன்று வரை பாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் அனில் கபூர். 80களின் ஆரம்பத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலம் தொடங்கி , தன் மனைவி சுனிதாவைக் காதலித்து பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 1984ஆம் ஆண்டு திருமணம் செய்தார் அனில் கபூர்.
இந்நிலையில், இன்று அனில் கபூர் - சுனிதா தம்பதியினர் தங்களது 36ஆம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடும் நிலையில், இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து இவர்களது மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிட்டுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில் ”இருவருக்கும் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துகள். உங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறேன், 11 வருட காதல் வாழ்விலும், 36 வருட திருமண வாழ்விலும் நீங்கள் இருவரும் இணைந்து இருந்துள்ளீர்கள். இது அவ்வளவு எளிதல்ல!
காதல், சிரிப்பு, கோபம் என சினிமாவுக்கு இணையாக, என் வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த காதல் கதை உங்களுடையதுதான். உங்கள் குழந்தைகளான நாங்கள் உங்களைப் பெருமைப்படுத்துவோம் என நம்புகிறேன்” என மனம் நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளார்.
- View this post on Instagram
“ My Husband is My Happy Place” Happy 36th anniversary.. love you beyond time 🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰❤️❤️😀😀
">
முன்னதாக, ’இது காலம் கடந்த காதல்’ எனக் குறிப்பிட்டும் சுனிதாவும் தன் காதல் கணவர் அனிலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : ஹாங்காங்கில் மீண்டும் வெளியாகும் 'பேட்மேன்' சீரியஸ் படங்கள்