பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் உள்ள ஜூஹூ-வெர்சோவா இணைப்பு சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், 14, 15, 16ஆவது தளங்களில் ஹிருத்திக் ரோஷனின் வீடுகள் அமைந்துள்ளன. இதில் ஒன்று டூபிளக்ஸ் பென்ட் ஹவுஸ் வகையிலும், மற்றொன்று ஒற்றை மாடி வீடாகவும் அமைந்துள்ளது. கடந்த வாரம் இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.
அரபிக் கடலை பார்த்தவாறு இருக்கும் இந்த வீடுகளின் மொத்த அளவு 38 ஆயிரம் சதுர அடி. மொட்டை மாடி 6,500 சதுரடி ஆகும். ஹிருத்திக்குக்கென மொத்தம் 10 பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் 27,534 சதுர அடி இருக்கும் டூபிளக்ஸ் இல்லத்தை 67.5 கோடி ரூபாய்க்கும், 11,165 சதுர அடியில் இருக்கும் இல்லத்தை 30 கோடி ரூபாய்க்கும் ஹிருத்திக் ரோஷன் வாங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.